- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மெகேதாடு
- கர்நாடக
- துணை முதலமைச்சர்
- டி. கே. சிவகுமார்
- தில்லி
- புது தில்லி
- உச்ச நீதிமன்றம்
- மேகதாது அணை
- தமிழ்நாடு அரசு
புதுடெல்லி: மேகதாது அணை தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தர்வில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்த உச்ச நீதிமன்றம் அது தொடர்பான தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்து இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான மேகதாது அணை தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு தலையிட முடியாது.
தமிழ்நாடு தங்கள் தரப்பிலிருந்து எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அதுபற்றி எங்களுக்கு எந்தவித கவலையும் கிடையாது. நாங்கள் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வோம். கர்நாடகா மக்களின் சார்பாக நான் நீதிமன்றத்திற்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் நகலும் தற்போது எங்களிடம் கைக்கு வந்துவிட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு எங்களின் அடுத்த நகர்வு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்
