×

பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அறிக்கை

சென்னை: பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழ்நாடு அரசு விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை இன்று தள்ளுபடி செய்துள்ளது. இதில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என்று பிரித்தாலும் சூழ்ச்சியுடன் பயிர் கடன் தள்ளுபடி செய்ததை தமிழ்நாடு அரசு மறு பரிசீலனை செய்து அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu Kisan Sangam ,president ,Chennai ,state president ,Velusamy ,Tamil Nadu Government Farmers Primary Agricultural Cooperative… ,
× RELATED டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்து...