×

தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம்; கணவரை அடித்துக்கொன்ற நர்ஸ் கள்ளக்காதலனுடன் அதிரடி கைது

திருமலை: கள்ளக்காதலை கண்டித்த கணவரை அடித்துகொன்று புதைத்த நர்ஸ், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்யம்ரெட்டி (38). இவரது மனைவி கல்பனா (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயண்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்பனா நர்ஸாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கல்பனாவுக்கும், சிந்து (30) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த கணவர் முத்யம்ரெட்டி கடும் வேதனை அடைந்தார். மனைவிக்கு அறிவுரை கூறினார். இதை ஏற்காத கல்பனா தனது கள்ளக்காதலனுடன் தொடர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த கல்பனா, கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை கொல்ல முடிவு செய்தார். இதை தனது கள்ளக்காதலன் சிந்துவிடம் கூறியுள்ளார். அதன்படி 10 நாட்களுக்கு முன், கணவரை மானூர் அடுத்த எல்கோய் கிராமத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு கள்ளக்காதலனை வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து முத்யம்ெரட்டியை சரமாரி அடித்து, உதைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முத்யம்ரெட்டி இறந்தார். பின்னர் சடலத்தை அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.

அதன்பிறகு வீடு திரும்பிய கல்பனா தனது கணவர் மாயமானதாக போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். ஆனால் முத்யம்ரெட்டி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கல்பனாவின் நடவடிக்கையை கண்காணித்தனர். இதில் சந்தேகமடைந்த போலீசார், நேற்று முன்தினம் கல்பனாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலுக்கு தொடர்ந்து இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று புதைத்ததாக ​​ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து போலீசார், நேற்று சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கல்பனாவையும், தலைமறைவாக இருந்த அவரது கள்ளக்காதலன் சிந்துவையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tirumala ,Mudyam Reddy ,Gangapur ,Sangareddy district of Telangana ,Kalpana ,Narayangate ,
× RELATED தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த...