மேலூர், மார்ச் 4: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டி வெள்ளினிப்பட்டியில் நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்றன. வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடு முட்டியதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயமடைந்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சேர்வீட்டை சேர்ந்த ராசு மகன் ரகுமான்(28) மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்து போனார்.
