×

லே பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கியது3 ராணுவ அதிகாரிகள் தப்பினர்: மேஜர் ஜெனரல் செல்பி எடுத்ததால் பரபரப்பு

 

புதுடெல்லி: லடாக்கின் அடுத்த லே பகுதியில் மே 20 அன்று சீட்டா என்ற ராணுவ ஹெலிகாப்டரில் ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் இரண்டு மேஜர்கள் பயணம் செய்தனர். லே அருகே உள்ள மலைப்பாங்கான டாங்ஸ்டே பகுதியில் சென்ற போது ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று இந்திய ராணுவ அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒற்றை எஞ்சின் கொண்ட அந்த ஹெலிகாப்டரை லெப்டினன்ட் கர்னலும் மேஜரும் இயக்கி வந்தனர்.

3வது காலாட்படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா, அதில் பயணியாகப் பயணம் செய்தார். விபத்துக்குப் பிறகு மேஜர் ஜெனரல் மேத்தா மற்ற இரண்டு அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலத்த சேதமடைந்த ஹெலிகாப்டருக்கு அருகில் உள்ள பாறைகளில் அவர்கள் அமர்ந்திருப்பதை அந்தப் படம் காட்டியது.

Tags : Leh ,Major General ,New Delhi ,Cheetah ,Ladakh ,Tangste ,
× RELATED தெலுங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக கோடைக்காலத்தில் 16 பேர் உயிரிழப்பு