×

பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்காக விபி ஜி ராம் ஜி சட்டத்தின் வரைவு விதிகள் வௌியீடு

 

புதுடெல்லி: விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்டத்தின் வரைவு விதிகள் பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்காக வௌியிடப்பட்டுள்ளது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்துக்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி மசோதா என்ற பெயரில் புதிய மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

விபி ஜி ராம் ஜி திட்டத்தில் தற்போதுள்ள 100 நாள்களுக்கு பதிலாக, ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 125 நாள்கள் கட்டாய வேலை உறுதி அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வேலை தரப்படாவிட்டால், தொழிலாளர்களுக்கு வேலையில்லா உதவித்தொகை அளிக்கப்படும்.

தொழிலாளர்களுக்கான ஊதியம் நேரடியாக தொழிலாளர்களின் வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளுக்கு வாராந்திர அடிப்படையில் அல்லது 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கவும் புதிய சட்டத்தில் இடமுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்நிலையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தின் வரைவு விதிகள் பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளத்தில் நேற்று வௌியிடப்பட்டது.

Tags : New Delhi ,
× RELATED தெலுங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக கோடைக்காலத்தில் 16 பேர் உயிரிழப்பு