×

கேரள அரசின் விஷு பம்பர் லாட்டரி: கொல்லம் முதியவருக்கு ரூ.12 கோடி பரிசு

 

திருவனந்தபுரம்: கேரள அரசின் விஷு பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதன் முதல் பரிசு ரூ. 12 கோடியாகும். VB 135452 என்ற எண்ணுக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த டிக்கெட் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் விற்பனையானது. குலுக்கல் முடிந்த ஒரு சில மணிநேரத்திலேயே அந்த அதிர்ஷ்டசாலி யார் என கண்டுபிடிக்கப்பட்டார். கருநாகப்பள்ளி அருகே உள்ள ஆனயடி பகுதியைச் சேர்ந்த பொன்னன் (76) என்ற முதியவருக்குத் தான் முதல் பரிசு ரூ. 12 கோடி கிடைத்தது. இவருக்கு ராதாமணி என்ற மனைவியும், வினோத்குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருமே லாட்டரி டிக்கெட் விற்பனை தான் செய்து வருகிறார்கள்.

Tags : Kerala government ,Vishu Bumper Lottery ,Thiruvananthapuram ,Karunagappally, Kollam district.… ,
× RELATED தெலுங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக கோடைக்காலத்தில் 16 பேர் உயிரிழப்பு