×

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிகமாக ஆஜராக 5 குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசு ஆணை

 

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக 5 வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தவெக வழக்கறிஞர்கள் அணியிலிருந்து புதிய அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறைகால நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

இதையடுத்து, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் அரசுக்கு புதிய வழக்கறிஞர்களை நியமிக்குமாறு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் தற்காலிகமாக நீதிமன்றத்தில் ஆஜராக 5 குற்றவியல் வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் கே.மணிவண்ணன் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி ஆர்.கணேஷ்குமார், ஏ.அமர்நாத், எஸ்.யோகராஜா சேகர், சி.ஆர்.மலர்வண்ணன், ஆர்.ராஜசேகர் ஆகியோர் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Madras High Court ,Tamil Nadu government ,Chennai ,Thaveka government ,Tamil Nadu ,DMK ,
× RELATED 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!