×

அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ய சென்றபோது விதிமீறலா? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ய சென்றபோது விதிமீறல் ஏற்பட்ட புகார் எழுந்த நிலையில் ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அண்மையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தவெக அமைச்சர் நிர்மல் குமார் தரிசனம் செய்ய சென்று இருந்தார். அவருக்காக மதியம் கோயில் நடை அடைப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.

அமைச்சர் மூலஸ்தானத்தில் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அமைச்சர் சாமி தரிசனத்திற்காக கோவில் நடை தாமதமாக சாத்தப்பட்டு ஆகம விதியை கோவில் நிர்வாகம் மீறியதாக பக்தர்கள் குற்றச்சாட்டினர்.  இந்நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் சென்ற போது நடந்தது என்ன என்பது குறித்து அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேறு வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags : Minister ,Nirmalkumar ,Madurai ,High Court ,Thiruparankundram temple ,Madras High Court ,Department of Charities ,
× RELATED விஜய் பரப்புரை செய்ததற்கு எதிரான வழக்கு – தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு