×

பொறியியல் மாணவர் சேர்க்கை ஜூன் 1ல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடக்கம்

 

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கையில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூன் 1 முதல் தொடங்க உள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழி ஆவணச் சரிபார்ப்பு ஜூன் 8 அன்று தொடங்கி, ஜூன் 20 வரை நடைபெறும். அசல் சான்றிதழ்களை ஜூன் 6ம் தேதிக்குள் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி வரும் ஜூன் 1 முதல் ஜூன் 9ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெறவுள்ளன.

விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்த தகுதியான மாணவர்கள் தங்களின் உரிய விளையாட்டு சான்றுகள் மற்றும் கல்வி ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிகளில் நேரில் கலந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் எந்த தேதிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற விவரம் தனிப்பட்ட மாணவர்களுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tneaonline.org-ல் சென்று மாணவர் தெரிந்துகொள்ளலாம்.

Tags : Chennai ,
× RELATED ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய...