- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டிஜிபி
- வெங்கடராமன் சிவில் சப்ளை சிஐடி
- பவானீஸ்வரி
- சிங்கப்பூர் சிறப்புப் படை ஐ. ஜி
- சென்னை
- சிங்கப்பூர் சிறப்புப் படை ஐ. ஜி.
- உள்துறை செயலாளர்
- மணிவாசன்
சென்னை: முன்னாள் காவல்துறை பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமன் சிவில் சப்ளை சிஐடிக்கும், புதிதாக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானீஸ்வரி உட்பட மாநிலம் முழுவதும் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காவல்துறை நிர்வாக பிரிவு டிஜிபியாக இருந்த வெங்கடராமன் சிவில் சப்ளை சிஐடிக்கும், காவல்துறை தலைமையிடம் ஐஜியாக இருந்த பவானீஸ்வரி புதிதாக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவினாஷ்குமார் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கும், காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஐஜியாக பணியாற்றி வந்த பிரவீன்குமார் அபினபு வடக்கு மண்டல ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி சரவண சுந்தர், குற்றப்பிரிவு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் வேலூர் சரக டிஐஜியாகவும், தென் சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை கமிஷனராக இருந்த விஜயகுமார் சென்னைர தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருந்த அபிஷேக் குப்தா தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் கமாண்டன்டாக இருந்த எஸ்பி பிருந்தா, நீலகிரி எஸ்பியாகவும், சென்னை சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த ஷஹனாஸ் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த அரவிந்த், காஞ்சிபுரம் எஸ்பியாகவும், தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த அல்லட்டிபள்ளி பவன் குமார் ரெட்டி கோவை மாவட்ட எஸ்பியாகவும்,
கோவை மாவட்ட எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், திருவண்ணாமலை நகர உதவி எஸ்பியாக பணியாற்றி வந்த சதீஷ்குமார் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும், விழுப்புரம் சப் டிவிஷன் உதவி எஸ்பியாக இருந்த ரவீந்திர குமார் குப்தா எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
