சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை: நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்படுகின்றனர். அந்த வகையில் 2026-2027ம் கல்வி ஆண்டில் சென்னை மாவட்டத்தில் செயல்படும் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர்க்கை நடத்த கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அவ்வாறு பெறப்பட்ட 7004 விண்ணப்பங்களில் 5386 தகுதியான விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி 609 பள்ளிகளில் 22ம் தேதி 10 மணிக்கு குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதையடுத்து, விண்ணப்பித்த பெற்றோர் இணைய வழியில் தாங்கள் பதிவு செய்த விண்ணப்பத்துடன் 22ம் தேதி நடக்கும் குலுக்கலில் அந்தந்த பள்ளிகளில் நேரில் பங்கேற்க வேண்டும்.
