×

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள்

சென்னை: கடந்த மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8,70,643 மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,35,247 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 4,35,396 ஆகும்.

மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8,21,105 அதாவது 94.31% ஆகும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் எண்ணிக்கை 4,19,891 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 4,01,214 ஆகும். மாணவர்களை விட 4.32% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 தேர்ச்சி பெற்று முதல் இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.54 தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் 97.41 தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது, திருச்சி 97.31 தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் 97.30 தேர்ச்சி பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.

அரசு பள்ளிகளை பொறுத்தவரை சிவகங்கை மாவட்டம் 97.42 தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் 97.09 தேர்ச்சி பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது, தஞ்சாவூர் மாவட்டம் 96.89 தேர்ச்சி பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் 96.78 தேர்ச்சி பெற்று நான்காம் இடம் பெற்றுள்ளது. திருச்சி மாவட்டம் 96.48 தேர்ச்சி பெற்று ஐந்தாம் இடம் பெற்றுள்ளது.

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 13,292, இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 11,416 (85.89%) ஆகும். தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எணிக்கை 370 , இதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 354 (95.68%)ஆகும். தேர்வெழுதிய தனித்தேர்வுகள் எண்ணிக்கை 24,353, இதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 8,744 (35.91%) ஆகும்.

Tags : Chennai ,
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 94.31% பேர் தேர்ச்சி