×

தூத்துக்குடி ரவுடி கொலையில் தேடப்பட்ட இருவர் கோர்ட்டில் சரண்

 

தூத்துக்குடி, மே 20: தூத்துக்குடி ரவுடி கொலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்னோவின் (28). கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க வந்த ஸ்னோவின் நண்பர் சூசை படுகாயமடைந்தார். சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி சந்தனராஜ், முத்துக்குமார், இசக்கிமுத்து, கார்த்திகேயன் மற்றும் சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தாளமுத்துநகர், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் பரத் (20), இதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் மகன் சதீஷ் (22) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் தூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 2ல் நேற்று சரணடைந்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பேரில் பரத், சதீஷ் ஆகிய இருவரும் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்

 

Tags : Thoothukudi Rawudi ,Tuticorin ,Snowvin ,Tuthukudi Muthukrishnapura ,Rawudi ,
× RELATED மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 4 ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்