×

டாஸ்மாக் ஊழியர்கள் இன்று முதல் கடையடைப்பு போராட்டம்

 

திருப்பூர், மே 26: திருப்பூர் மாவட்ட அனைத்து நிலை டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பாக நேற்று டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 197 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகளில் கடந்த 6 மாதமாக வாடிக்கையாளர்கள் விட்டு செல்லும் காலி மது பாட்டில்களை கடை பணியாளர்களை கொண்டு வாங்கி வந்தோம். திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது காலி மது பாட்டில்களை மாற்று பணியாளர்களை கொண்டு திரும்ப பெறப்படும் என தாங்கள் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தீர்கள்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போதைய நிலையிலிருந்து இதற்கு தீர்வு காணும் வரை இன்று 26-ம் தேதி முதல் மாவட்டத்தில் செயல்படும் 197 கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிலை டாஸ்மாக் பணியாளர்கள் அடங்கிய கூட்டுக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

 

Tags : TASMAC ,Tiruppur ,District ,Manager ,Tiruppur District All Level TASMAC Trade Union Joint Committee ,Tiruppur district ,
× RELATED அவிநாசி அருகே ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்