சென்னை: தங்கம் விலை நேற்று திடீரென பவுனுக்கு ரூ.900 அதிகரித்தது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 18,000க்கு விற்பனையானது. ஆனால், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்தது.
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14870க்கும், பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 18960க்கும் விற்பனையானது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை மீண்டும் 15 ஆயிரத்தை நெருங்குகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைபோல வெள்ளி விலையில் நேற்று மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது.
