×

இன்று தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியாகவே தான் இருக்கிறது. இதை தொடர்ந்து கடந்த மே 16ஆம் தேதி தங்கம் விலை கணிசமாக குறைந்தது. அதே விலையே 3 நாட்கள் நீடித்து வந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்தது.

நேற்றைய தினம்(மே.19) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,960க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,870க்கு விற்பனையானது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று(மே.20) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கும், ஒரு கிலோ ரூ.2,85,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED ஒன்றிய அரசுக்கு ரூ.2.87 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்கியது ரிசர்வ் வங்கி