சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,18,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
அதாவது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. இதனையடுத்து சென்னையில் நேற்று மார்க்கெட் தொடங்கிய நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்கப்பட்டது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,750க்கும், ஒரு சவரன் ரூ.1,18,800க்கும் விற்பனையானது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,18,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி, விலை மாற்றமின்றி ரூ.300க்கு விற்பனையாகிறது.
