×

கீழடி, திருப்புவனம் செல்ல அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கலாம்: பயணிகள் எதிர்பார்ப்பு

 

மதுரை, மே 19: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு மட்டுமின்றி சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் மதுரையில் இருந்து அரசு டவுன் பஸ்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. இதனால் கிராமத்தில் இருந்து மதுரை டவுனுக்கு வேலைக்கு வந்து விட்டு, மீண்டும் திரும்பிச்செல்ல அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பெரும் வசதியாக உள்ளது.
இதேபோல் மதுரையில் இருந்து கீழடி மற்றும் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலுக்கு செல்ல பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. ஆனால், அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல போதிய அளவில் பஸ் வசதி இல்லை.

Tags : Anna Bus Stand ,Keezhadi ,Thiruppuvanam ,Madurai ,Madurai district ,Sivaganga ,Virudhunagar ,
× RELATED உடுமலை பழைய பேருந்து நிலையம் பகுதியில் சாலையை கடக்க சிரமப்படும் மக்கள்