×

இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஸ்வீடன் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு…

கோதென்பர்க்: ஸ்வீடன் நாட்டின் கோதென்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய தொழில் வட்டமேசை மாநாட்டில் (ERT) பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி, ஐரோப்பாவின் முன்னணி வணிக தலைவர்களிடையே உரையாற்றினார். இதன்போது சுவீடன் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய ​​பிரதமர் மோடி ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ​​உற்பத்தி துறை, பசுமை ஆற்றல், தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, செமிகன்டக்டர்ஸ் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

​​உலகளாவிய முதலீடு மற்றும் உற்பத்திக்கு இந்தியா ஒரு விருப்பமான நாடாக உருவெடுத்து வருவதாகவும் கூறினார். தனது தலைமயிலான ஆட்சியில் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், செயல்திறன்களால் நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்றுவதற்காகவும், உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்துவதற்குமான சீர்த்திருத்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் எடுக்கப்பட்டு கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

நாட்டில் பெருகிவரும் நடுத்தர வர்க்கம், வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் இளம் பணியாளர்கள் போன்றவற்றை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்திகள் என்று அவர்கள் மத்தியில் பிரதமர் சுட்டிக்காட்டினார். சுவீடன்- இந்தியா இடையிலான தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான வழித்தடத்தை உருவாக்குவதில் நாம் இணைந்து பணியாற்றுவோம் எனவும் பேசினார்.

Tags : PM Modi ,India ,Gothenburg ,Modi ,European Industry Roundtable Conference ,ERT ,Gothenburg, Sweden ,Europe ,Sweden ,
× RELATED ஒன்றிய அரசுக்கு ரூ.2.87 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்கியது ரிசர்வ் வங்கி