திருச்சி: தவெகவின் ஆட்சியின் ஆயுட்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லிவிட்டு அவர்களின் ஆதரவை பெறுவதா?, அமமுக எம்.எல்.ஏ. அமைச்சரானால் குதிரை பேரம் என்பது உறுதியாகிவிடும். விஜய்யை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பது அறம் அல்ல, அதிமுகவை அழிக்க நினைக்கிறது த.வெ.க..
அதிமுகவை அழிக்க நினைக்கும் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது எப்படி நியாயமாகும். அமமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம். தவெகவின் ஆட்சியின் ஆயுட்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் கட்சியின் தலைமைதான் சட்டமன்ற குழு நிர்வாகிகளை நியமிக்க முடியும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபுசோரன் வழக்கு நிலை தவெக அரசுக்கு ஏற்படும்.
எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள கொறடா உத்தரவே செல்லும். இன்ஸ்டாவிலேயே ஆட்சி நடத்தலாம் என தவெக நினைக்கிறது. இன்ஸ்டா ரீல்ஸை பார்த்து வாக்களித்த மக்கள் ரியலை பார்க்கும்போது வருத்தப்படுகிறார்கள். தவெகவை ஆதரித்த எம்.எல்.ஏ.க்கள் ரோட்டில்தான் நிற்கப் போகிறார்கள். அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தருவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிவதற்கு சமம். அதிமுகவை அழிக்க துணை போகும் செங்கோட்டையனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் வீட்டுக்குச் சென்று அறிக்கை விடுவது சினிமா டயலாக் அல்ல. ஆட்சி அமைக்கும் வெறியில் ஒரு எம்.எல்.ஏ.வைக் கூட தூக்குகிறார்கள் என்று கூறினார்.
