- வி.கே.சி
- தவேகா
- வன்னியரசு
- சட்டமன்ற உறுப்பினர்
- திண்டிவனத்தில்
- திராவிடர்
- கஜாகம்
- விழுப்புரம் மாவட்டம்
- NEET
- வி.கே.சி எம்.எல்.ஏ.
- திமுக எம்.எல்.ஏ.
- மாசிலாமணி…
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தபால் நிலையம் எதிரே நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திண்டிவனம் தொகுதி விசிக எம்எல்ஏ வன்னிஅரசு, திமுக முன்னாள் எம்எல்ஏ மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் வன்னி அரசு கூறுகையில், நீட் தேர்வு முறையே ஒரு மோசடி முறை. இது குறிப்பிட்ட வர்க்கத்துக்கும், குறிப்பிட்ட சமூகத்துக்கான முறை என்பது அம்பலமாகியுள்ளது.
ஒன்றிய பாஜ அரசு இனிமேலும் நீட் என்கிற பெயரில் சனாதனத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது மக்கள் விரோத செயல். எனவே நீட் தேர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். தமிழக அமைச்சரவையில் அதிமுக பங்கேற்கக் கூடாது என்பது ரவிக்குமார் எம்பியின் கருத்து மட்டுமில்லை. அது விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துமாகும். தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறுமா என்பதை கட்சி தலைவர் அறிவிப்பார். அறிவிப்புக்காக விடுதலைச் சிறுத்தைகள் காத்திருக்கிறார்கள், என்றார்.
