மே 25 முதல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கு (அறிவிக்கை எண். 09/2025, நாள் 21.05.2025 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) நடைபெற்ற தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 23.01.2026 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மேற்கண்ட தெரிவில் அடங்கிய கீழ்கண்ட பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை, (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) சென்னை-600 003ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 25.05.2026 அன்று நடைபெற உள்ளது.

தேர்வர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண் / இடஒதுக்கீட்டு விதி /காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் குறிப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணைய தளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் எழுத்துதேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மேற்படி பதவிகளுக்கான தெரிவு மேற்கொள்ளப்படும். எனவே, மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: