×

குடும்ப பிரச்னையால் தொழிலாளி தற்கொலை

திருப்பூர், மார்ச் 2: திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(37). இவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ராதாமணி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். சங்கருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கர் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்

Tags :
× RELATED கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை