புதுடெல்லி: சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டிற்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகப் பிரிவைச் சேர்ந்த 1986ஆம் ஆண்டுத் தொகுப்பு ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட் கடந்த 2023 மே 25 அன்று சிபிஐ இயக்குநராக பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி மோடி அரசு உத்தரவிட்டது.
தற்போது நேற்றுடன் அவரது ஓராண்டு பதவி நீட்டிப்பு காலம் முடிவடைந்த நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு மேலும் ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கி நேற்று பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், லைமை நீதிபதி சூர்ய காந்த், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக் குழுவின் கூட்டம் நேற்றுமுன்தினம் டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து பிரவீன் சூட்டின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்திற்குப் பிறகு, சிபிஐ இயக்குநரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை குறித்து ராகுல் காந்தி தனது கடுமையான மாறுபட்ட கருத்தை அப்போது பதிவு செய்துள்ளார். மேலும், ஒரு சார்புடைய செயல்முறையின்\” ஒரு பகுதியாக இருக்கத் தான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
