×

CHANGE-க்கு பின்னால் EXCHANGE.. புஷ்பா பட பாணி சோஃபா.. கூவத்தூரை மிஞ்சுகிற அளவுக்கு தவெக ஆட்சியில் அவலங்கள்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், CHANGE, CHANGE-னு (மாற்றம்) சொன்னீங்க.. ஆனால், அதுக்கு பின்னால் EXCHANGE (பரிமாற்றம்) இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆட்சியை தக்க வைக்க கூவத்தூரை மிஞ்சுகிற அளவுக்கு தவெக ஆட்சியில் அவலங்கள் நடைபெற்று வருகின்றன என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சி நடத்தாதீர்கள் என்று கூறினார். “அதிமுக பிளவு பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நடந்து தான் ட்விஸ்ட். அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதலமைச்சரும் போறாரு. புஷ்பா பட பாணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

தேர்தல் நேரத்தில் எங்களை ஊழல் சக்தி என்று சொன்ன தவெக-வை பார்த்து மக்கள் கேள்வி கேட்க துவங்கி விட்டார்கள். தூய அரசு அமைப்போம் என்று சொன்னீர்களே, இதுதான் அந்த லட்சணமா என்று மக்கள் விமர்சிக்க துவங்கி விட்டார்கள் என்றார்.

Tags : Pushpa ,Dekka ,Kowatur ,CHENNAI ,UDAYANITI STALIN ,Kowattoor ,
× RELATED விஜய் வீட்டிற்கு முகத்தை மூடி கொண்டு...