×

வெளியே போவதற்கு ஏதேனும் காரணம் வேண்டும் என்பதற்காக திமுகவை காரணம் காட்டி சி.வி.சண்முகம் போன்றவர்கள் வெளியேறுகிறார்கள்: அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: சி.வி.சண்முகத்தைப் போன்றவர்களுக்கு அவர்கள் போவதற்கு ஏதேனும் காரணம் வேண்டும். அதற்காக எங்களை காரணம் காட்டிவிட்டு அவர்கள் வெளியேறுகிறார்கள். சி.வி.சண்முகத்தை பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். தொடர்ந்து பதவியிலேயே இருந்தவர். 2021ல் அவர் தோற்றவுடனே 2022ல் எம்.பி. ஆகிவிட்டார். இப்போது அதை ராஜினாமா செய்திருக்கிறார். ஆக சில பேருக்கு பதவி அரிப்பு இருக்கும்.

அகில இந்திய அளவில் இருப்பவர்களுக்கு கூட. பிஜேபியில் இருக்கிறவர்கள் காங்கிரஸ் ஆட்சி வந்தால் காங்கிரசுக்கு போவார்கள், காங்கிரசில் எங்களோடு ராஜ்யசபாவில் இருந்த ஐந்து பேர் பிஜேபியில் மந்திரி ஆகி விட்டார்கள். இதெல்லாம் வடநாட்டில் கட்சி மாறுகிற கலாச்சாரமாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை 60 ஆண்டு காலமாக, ஏன் 1952 தேர்தலில் இருந்து இதுவரை தமிழ்நாட்டில் கட்சி தாவுவது, மைனாரிட்டி அரசு என்றெல்லாம் பார்க்காத ஒன்று இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் எங்கள் தலைவர் தெளிவான முடிவெடுத்து நாங்கள் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று சொல்லி விட்டார். இன்றைக்கு எங்களது கட்சியின் சார்பில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற உதயநிதி ஸ்டாலினும் தெளிவாக சட்டமன்றத்திலே தன்னுடைய உரையை ஆற்றி இருக்கிறார். ஆகவே அதிமுக உடைவதற்கு எங்களைக் காரணம் காட்டுவது என்பது, அவர்களைத் திசை திருப்புவதற்கு மட்டுமல்ல, ஏதோ ஒரு காரணம். காரணத்தை தேடிக்கொண்டு போவதற்கு முடிவு எடுத்துவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : CV Shanmugam ,DMK ,RS Bharathi ,Chennai ,Anna Arivalayam ,Shanmugam ,CV ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என...