×

ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி

சென்னை: முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் (அரசியல்) பிரிவு சிறப்பு பணியாளர் அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து நேற்று தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். சிறப்பு அதிகாரிக்கான பணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் தான் இந்த ரிக்கி ராதன் பண்டிட். இவரை, அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல ஜோதிடரான இவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும், தவெகவின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜோதிடராகவும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் இருந்தார். அவர் பேச்சைக்கேட்டு, தமிழகம் முழுவதும் சசிகலா நிலங்களை வாங்கிக் குவித்தார். பின்னர், இருவருக்கும் மோதல் ஏற்பட்டதால், ெஜயலலிதா அவரை போயஸ்கார்டன் பக்கமே வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். பின்னர் எப்படியோ விஜய்யுடன் நெருக்கமாகி இன்று அவரது சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Jayalalithaa ,Vijay ,Astana Jotidar ,Chennai ,Vijay Aasthana Jothidar ,Tamil Nadu ,Chief Secretary ,Saikumar ,Ricky Ratan Pandit ,Chief Minister ,Political) Division ,
× RELATED குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்