×

தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டும் நீட் பேப்பர் லீக் முறைகேடுகள் வெளிவந்து, தேர்வு ரத்து ஆகியிருக்கு. லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க. ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல ஸ்கேம் இல்ல, நீட்டே ஒரு ஸ்கேம்-தான்!

ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும். மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் தாமதம், மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படணும். தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

சபாநாயகர், துணை சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி.பிரபாகருக்கும், பேரவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிசங்கருக்கும் எனது வாழ்த்துகள். மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.

ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு. அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,MK Stalin ,Chennai ,DMK ,NEET ,
× RELATED குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்