×

பிரதமரின் அறிவுறுத்தலால் 5 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் – நகை வியாபாரிகள் வேதனை

சென்னை: ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க சொன்ன பிரதமரின் அறிவிப்பால் 5 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பினர் கவலை தெரிவித்து உள்ளனர். தங்கம் விலையேற்றம், போர் பதற்ற சூழல் போன்றவற்றின் காரணமாக ஏற்கனவே தங்கம் விற்பனை சுமார் 40% குறைந்துள்ளதாகவும் நகை வியாபாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். தங்க வியாபாரிகள் சம்மேளனத்தை சேர்ந்த சபரிநாத் என்ற நகை வியாபாரி பேசுகையில், தங்க நகை வாங்க வேண்டாம் என்று சொல்வதோ அல்லது தங்க நகை சேமிப்பு வேண்டாம் என்று சொல்வதோ அது ங்களுக்கு ஒரு பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால் இந்த துறையை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி சுமார் 5 கோடி மக்கள் இருக்கிறோம். இதில் சுமார் இரண்டரை கோடி பேர் தங்க நகை உற்பத்தி துறையில் மட்டுமே இருக்கிறார்கள். அன்றாடம் அவர்கள் வேலை செய்தால் தான் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும். ஏற்கனவே எங்கள் தொழில் 40 சதவீதம் சரிவை சந்தித்துள்ள நிலையில், நாட்டின் பிரதமரே தங்கம் வாங்காதீர்கள் என்று மக்களை அறிவுறுத்தினால் நாங்கள் என்ன செய்வது என்று வேதனை தெரிவித்தார். தங்கம் குறித்தான தனது சமீபத்திய அறிவுறுத்தலை பிரதமர் வாபஸ் வாங்கினால் நன்றாக இருக்கும் என்று சபரிநாத் கோரிக்கை விடுத்து உள்ளார்.

முன்னதாக தங்கம் இறக்குமதி சார்ந்து அதிகளவிலான தொகையை நம் நாடு செலவிடுகிறது. எனவே சர்வதேச அளவில் இயல்பு நிலை திரும்பும் வரை தங்கம் வாங்குவதை மக்கள் தற்காலிகமாக தள்ளி போடலாம் என்று பிரதமர் மோடி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Tamil Nadu Jewellers' Association ,
× RELATED தூத்துக்குடியில் கல்லறை தோட்டத்தில்...