- சோபன்தேவ்
- மேற்கு வங்க சட்டமன்றம்
- கொல்கத்தா
- பாலிகஞ்ச்
- சட்டமன்ற உறுப்பினர்
- சோபன்தேவ் சட்டோபாத்யாய்
- மேற்கு வங்க சட்டமன்றம்
- பாஜக
- திரிணாமூல் காங்கிரஸ்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்ட பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பாலிகஞ்ச் சட்டமன்ற உறுப்பினர் சோபன்தேப் சாட்டோபாத்யாயா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றுள்ளது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்தது. மாநிலத்தின் முதல் பாஜ முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமிக்கப்பட்டுள்ளார். அசிமா பத்ரா மற்றும் நைனா பந்தோபாத்யாய் ஆகியோர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்களாகப் பணியாற்றுவார்கள். மேலும் பிர்ஹாத் ஹக்கீம், தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
