×

ரூ.100 கோடி பண மோசடியில் கைதான பஞ்சாப் அமைச்சருக்கு 7 நாள் ஈடி காவல்: அரியானா நீதிமன்றம் உத்தரவு

 

குருகிராம்: பஞ்சாப் தொழில் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோராவின் சண்டிகர் வீட்டில், நேற்றுமுன்தினம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியில் 2 இடங்களிலும், குருகிராமின் உத்யோக் விஹாரில் உள்ள ஹாம்ப்டன் ஸ்கை ரியாலிட்டி நிறுவனத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சஞ்சீவ் அரோராவை அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர். ரூ.100 கோடிக்​கும் அதி​க​மான மதிப்​புள்ள செல்​போன்​களை கொள்​முதல் செய்​த​தாக போலி​யான நிறு​வனங்​களிடம் இருந்து ஜிஎஸ்டி ரசீது பெறப்​பட்​டது தொடர்​பாக சஞ்சீவ் அரோரா மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டது. சஞ்சீவ் அரோராவை அரியானாவில் உள்ள குருகிராமிற்கு நேற்று முன்தினம் இரவு சஞ்சீவ் அரோரா அழைத்து வரப்பட்டார்.

குருகிராமில் உள்ள பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நேற்று காலை அவரை ஆஜர்படுத்தினர்.
போலி ரசீது தயாரித்தல் மற்றும் போலி நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் பணமோசடி செய்த குற்றத்தில் அமைச்சரே முக்கிய நபராக உள்ளார். எனவே அவரை 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கதுறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை விசாரித்த நீதிபதி நரேந்தர் சூரா,சஞ்சீவ் அரோராவை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு போதுமான காரணம் இருக்கிறது. அவரை 7 நாட்களுக்கு அமலாக்கத்துறையின் காவலில் வைப்பது நியாயமாகவும் சரியாகவும் இருக்கும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : ED ,Punjab ,minister ,Ariana ,Gurugram ,Chandigarh ,Industry ,Sanjeev Arora ,Enforcement Department ,Delhi ,Hampton Sky Reality Institute ,Udyog Vihar, Gurugram ,
× RELATED விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண் எம்பி: மகாராஷ்டிராவில் பரபரப்பு