ராயக்கோட்டை, மே 8: ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ராகியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ராகி அதிகளவில் விளைச்சலான நிலையில், தங்களின் வீட்டு தேவைக்கு போக மீதமே, விற்பனை செய்கின்றனர். இப்பகுதியில் நாற்று நட்டு தண்ணீர் பாய்ச்சி விளைவிப்பது, மேட்டு நிலங்களில் விதை தூவி மானாவரியாக விளைச்சலாவது என இரு வகையாக ராகி விளைச்சல் செய்யப்படுகிறது. நாற்று நட்டு விளைவிக்கப்படும் ராகி நல்ல நிறமாகவும், சாப்பிட மிருதுவாகவும் இருக்கும். மேட்டு நிலங்களில் விளைச்சலாவது கருப்பாகவும், கெட்டியாகவும் இருக்கும். உடலுக்கு வலிமையை கொடுப்பதால், உணவில் ராகி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மளிகை கடைகளில் ராகி மாவு கிலோ ரூ.80க்கும், ராகி கிலோ ரூ.50 வரை விற்பனையாகிறது.
