ராயக்கோட்டை, மே 6: ராயக்கோட்டையில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் டூவீலர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. ராயக்கோட்டையில், ஓசூர்-தர்மபுரி மெயின் ரோட்டில் தக்காளி மண்டிகள், பூ மார்க்கெட் அதனைத்தொடர்ந்து கடை வீதியில் மளிகைக்கடைகள், மெடிக்கல் ஸ்டோர்ஸ், மருத்துவமனைகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல் மற்றும் டீக்கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் டூவீலர்களில் வந்து செல்கின்றனர்.டூவீலர்களில் வருபவர்கள், தங்களின் டூவீலர்களை நிறுத்த இடம் இல்லாததால், மெயின் ரோட்டின் ஓரங்களில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். அவர்கள் திரும்ப வந்து எடுத்து செல்லும் வரை டூவீலர்கள் அங்கேயே நிற்கின்றன. அதனால் மெயின் ரோட்டில் வரும் லாரிகள், கார்கள், பஸ்கள் செல்வதில் இடப்பற்றாகுறையால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
