ஏரிப்பகுதியில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

 

ஓசூர், மே 8: சூளகிரி அருகே ஏரிப்பகுதியில் இருந்த 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பினை மீட்டு கிராம மக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சூளகிரி அடுத்த மைதாண்டப்பள்ளி கிராமத்திற்கு அருகே உள்ள ஏரி பகுதியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதனை மேய்ச்சலுக்கு சென்ற விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பினை பிடித்து சூளகிரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைபாம்பினை மீட்டு அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.

Related Stories: