×

சீனாவில் லஞ்சம் வாங்கிய பிரச்னை; மாஜி பாதுகாப்பு அமைச்சர் 2 பேருக்கு மரண தண்டனை

பீஜிங்: சீனாவில் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கின் அமைச்சரவையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வந்தவர் வெய் ஃபெங்கே. இவர் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பதவியில் லீ ஷங்ஃபு என்பவர் நியமிக்கப்பட்டார்.

இவர் சில மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தாலும், லஞ்சம் வாங்கியதாகவும், லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் லீ ஷங்ஃபுவும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், இரண்டு பேரும் சீனாவின் ஆளும் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் கடந்த 2024ம் ஆண்டு நீக்கப்பட்டனர். இருவர் மீதான குற்றச்சாட்டுகள் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், வெய் ஃபெங்கே, லீ ஷங்ஃபு இருவருக்கும் இரண்டு ஆண்டு கால அவகாசத்துடன் கூடிய மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

Tags : China ,Maji Defense Minister ,BEIJING ,Minister of Defense ,Cabinet ,President ,Xi Jinping ,
× RELATED அமெரிக்காவில் பயங்கரம் புளூ ஆரிஜன்...