×

தமிழ் நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ் நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற மே 13ஆம் தேதி வரை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு எச்சரிக்கை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடச்சியாக நாளைய தினத்தை பொறுத்தவரை நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, புதுவை , தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மே 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தமிழக டெல்டா மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மே 13ஆம் தேதி அன்று டெல்டா மாவட்டங்களில் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Southern Districts ,Delta Districts ,West Continuity Districts ,
× RELATED புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு:...