×

நன்றி கெட்ட காங்கிரஸ்; ஆர்.எஸ்.பாரதி ஆவேச பேட்டி

 

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தற்போது விலகி, தவெக உடன் கூட்டணி அமைத்துள்ளது. நன்றி கெட்டவர்கள் போகட்டும். திமுக தொண்டர்கள் இதனை மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. தலைக்குமேல் வெள்ளம் போன பின்பு, ஜான் என்ன, முழம் என்ன. எங்களை எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து அரசியல் செய்வோம்.

இந்தியா கூட்டணியே இல்லை, நாடாளுமன்றத் தேர்தலோடு அது முடிந்துவிட்டது. நிதீஷ் குமார், மம்தா பானர்னி என ஒவ்வொருவராக சென்று விட்டார்கள். இருந்தது நாங்கள் மட்டும்தான். பாஜவை தடுத்து நிறுத்துவதற்காக தவெகவுடன் செல்வதாக காங்கிரஸ் தரப்பில் கூறியிருக்கிறார்கள். இந்த திருவிளையாடல்களுக்கெல்லாம் யார் காரணம் என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும், அப்போது இப்படி பேசுகிறவர்கள் தலைகுணிந்து நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Congress ,R.S. Bharathi ,Chennai ,DMK Organization ,DMK ,TDP ,
× RELATED மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை...