×

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்

சென்னை:தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2025-26ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் பள்ளி மாணவ மாணவியர் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 பேரும், தனித் தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதினர். அதன் தொடர்ச்சியாக, பிளஸ்2 வகுப்பு தேர்வுகளுக்காக தமிழகம், புதுச்சேரியில் 3412 தேர்வு மையங்களும், அமைக்கப்பட்டன. இதையடுத்து, மார்ச் மாதம் இறுதியில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது.

மே மாதம் 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது. முன்னதாக ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து பணி நடந்தது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடவும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. ஆனால் முடிவுகளை அறிவிக்க, அரசு அனுமதி பெற்றபிறகே வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்ற சூழ்நிலை நிலவியது. இது குறித்து அரசு தரவில் வெளியான தகவலின்படி, தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் நடக்கிறது. அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை...