நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4வது நாளாக அங்கன்பணி வரன்முறை கோரிடாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா

நெல்லை, பிப். 26:   பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள், நெல்லையில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், சுழற்சி முறையில் பணியிட மாறுதல், விற்பனை நேரம் குறைப்பு  என்பது உள்ளிட்ட 16 ேகாரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நெல்லையில் குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்த தர்ணாவிற்கு கூட்டு நடவடிக்கை குழு செயலாளர் சரவணப்பெருமாள் தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சந்திரன், சிஐடியு மாநில குழு உறுப்பினர் சிவன்ராஜ், ஏஐடியுசி சாஸ்தா, டிஎன்ஜிடிஇயு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், டிஎன்எஸ்டபிள்யுடிஏ மாவட்ட தலைவர் கைக்கொண்டான், எல்எல்எப் மாவட்ட செயலாளர் முப்பிடாதி முன்னிலை வகித்தனர்.

தர்ணா போராட்டத்தில் எல்பிஎப் அமைப்புச் செயலாளர் தர்மன், சிஐடியு மாவட்டச் செயலாளர் மோகன், எல்பிஎப் தங்கராஜ், சரவணன், தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், மாரியப்பன், ரமேஷ், குமார் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். சிஐடியு மாவட்ட பொருளாளர் இளமுருகு நன்றி கூறினார்.

Related Stories:

>