×

தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி 4,441 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி: காங். எம்பி. வைத்திலிங்கம் டெபாசிட் இழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரங்கசாமி 4,441 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரங்கசாமி 10,024 வாக்குகள் பெற்று, 4,441 வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2வது இடத்தில் தவெக கூட்டணி நேயம் மக்கள் கழகம் வேட்பாளர் விநாயகம் 5,583 வாக்குகள் பெற்று 2வது இடமும், சுயேச்சை வேட்பாளர் சேது (எ) சேதுசெல்வம் 3,984 வாக்குகளை வாங்கி 3வது இடத்திலும் உள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் 2,990 வாக்குகள் பெற்று 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போதைய எம்பியும், மாநில காங்கிரஸ் தலைவரான வைத்திலிங்கம் டெபாசிட் இழந்ததால் காங்கிரசார் சோர்வடைந்துள்ளனர். உப்பளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பழகன் 9,099 வாக்குகள் பெற்று, 1026 வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தவெக வேட்பாளர் சிவா 8,073 வாக்குகள் பெற்று 2ம் இடமும், திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி 5,327 வாக்கு பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

முத்தியால்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வையாபுரி மணிகண்டன் 8,382 வாக்குகள் பெற்று, 952 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஈரம் ராஜேந்திரன் 7,430 வாக்குகள் பெற்று 2வது இடமும், தவெக வேட்பாளர் பிரகாஷ்குமார் 3,611 வாக்குகள் பெற்று 3வது இடமும் பிடித்துள்ளார்.

Tags : Chief Minister ,Rangasamy ,Thattanchavadi ,Congress ,Vaithilingam ,Puducherry ,NR Congress ,Thattanchavadi constituency ,Teva alliance ,Neyam Makkal Kazhagam ,
× RELATED தமிழக தேர்தல் 2026: 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் தவெக…