×

கடும் வெயிலின் தாக்கம் எதிரொலி: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை குறைந்தது

திருத்தணி: கடும் வெயிலின் தாக்கம் காரணமாக திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. நாளை கத்திரி வெயில் துவங்குகிறது. இதன்காரணமாக தற்போது திருத்தணி பகுதியில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் திருத்தணி முருகன் கோயிலில் விடுமுறை நாளான இன்று காலை பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.

பொது வரிசையில் நின்றிருந்த பக்தர்கள், சுமார் அரைமணி நேரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். மேலும் கோடை வெயிலில் பக்தர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, மலைக்கோயிலின் மாடவீதியில் பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக தென்னை நார் கம்பளத்தை விரித்து அடிக்கடி தண்ணீரை பீய்ச்சியடித்து வருகின்றனர். அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Tirutani Murugan Temple ,Thiruthani ,Pirithani ,Thiruthani Murugan Temple ,
× RELATED சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த...