டெல்லி: தமிழ்நாட்டில் நாளை வாக்குகள் எண்ணப்படும் நிலையில் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் பார்வையாளர்கள் உடன் காணொலி வாயிலாக டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள், முடிவுகளை அறிவிப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடக்கிறது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்
