×

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு!

டெல்லி: விவேக் விஹார் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஏ.சி. வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியின் ஷாதாரா பகுதியில் உள்ள விவேக் விஹாரில் உள்ள நான்கு மாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ மிக விரைவாக கட்டிடம் முழுவதும் பரவியதால், குடியிருப்பில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் 14 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்தில், படுகாயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தீ அணைக்கப்பட்டிருந்தாலும், கட்டிடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மேல் தளங்களில் யாராவது சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏ.சி. வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Delhi ,Vivek Vihar ,C. ,Shadara ,
× RELATED வணிக சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல்,...