×

வேப்பனஹள்ளி அருகே தக்காளி தோட்டத்தை சேதப்படுத்திய யானைகள்

வேப்பனஹள்ளி : வேப்பனஹள்ளி அருகே கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக வனப்பகுதியில் நான்கு யானைகள், கடந்த 3 மாதங்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் மலையோர வனப்பகுதி கிராமங்களான கட்டாயபீடு, கொல்லப்பள்ளி, சிங்கரிப்பள்ளி, சிகரலப்பள்ளி, எப்ரி கங்கமடுகு, நேரலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினாலும், இரவு நேரங்களில் மீண்டும் உணவு மற்றும் குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குள் புகும் யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று அதிகாலை கங்கமடுவு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், முனுசாமி என்பவரது விவசாய நிலத்தில், சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி தோட்டத்தை நாசம் செய்தன. யானைகளின் அட்டகாசம் இப்பகுதியில் தினசரி தொடர்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : Veppanahalli ,Tamil Nadu ,Karnataka ,Gathaiapedi ,Kollapalli ,Singgaripalli ,Sikaralapalli ,Epri Gangamatugu ,Niralagiri ,
× RELATED மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்!!