×

வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு: வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்

சென்னை: வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது வெற்றி வாய்ப்புகள் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வருகின்றனர். அவர்களிடம் வெற்றி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், திமுக வேட்பாளர்கள், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், பி.மூர்த்தி, இரா.ராஜேந்திரன், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், தே.மதியழகன், க.சுந்தர், தோப்பு வெங்கடாசலம், நிவேதா எம்.முருகன், வசந்தம் கார்த்திகேயன், என்.நல்லசிவம், எம்.சிவபாலன், ஈ.ராஜா ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்று பெறுவீர்கள் என்றும் அப்போது அவர் கேட்டறிந்தார். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து வேட்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : K. Dimuka ,Stalin ,Chennai ,MLA. K. ,K. Stalin ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாது: நயினார் பேட்டி