×

ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாது: நயினார் பேட்டி

நாகர்கோவில்: தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கருத்துக்கணிப்புகள் முறையாக இருந்தால் நம்பிக்கை இருக்கும். ஆனால் இப்போது பல இடங்களில் அது கருத்துத் திணிப்பாக தான் இருக்கிறது. வரும் 4ம் தேதி மக்களுடைய உண்மையான எண்ணங்கள் கண்டிப்பாக தெரிந்து விடும். வாக்குப்பதிவுக்கு அப்புறம் விஜய் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பே இல்லை. தேர்தலுக்கு முன் ஏதாவது இருந்ததா? என்பதை தான் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை விஜய் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டசபை அமைந்தால் விஜய் ஆதரவை கேட்பீர்களா என்று கேட்கிறீர்கள். அவர் அதிக தொகுதிகளில் ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. அதற்கான பேச்சே தேவையில்லை. உலக நாடுகள் இன்றைக்கு எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பக்கத்து நாடுகளில் கேஸ் கிடைப்பது இல்லை. ஈரான் – இஸ்ரேல் போர் என பல பிரச்னைகளுக்கு மத்தியிலும், இந்தியா எல்லா நாடுகளுக்கும் ஒரு நட்பு நாடாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை சயைல் கேஸ், டீசல், பெட்ரோல் என எதுவாக இருந்தாலும் மக்களின் நலன் கருதித்தான் முடிவெடுப்போம். சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறப் போகிறோம் என்பதால் அமைதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Nayinar ,Tamil Nadu ,Bajaj ,State ,President ,Nayinar Nagendran ,Kanyakumari ,
× RELATED வணிக சிலிண்டர் விலை உயர்வு செல்வப்பெருந்தகை கண்டனம்