×

வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டணி கட்சிகளின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் பரப்புரை, வாக்குப்பதிவின் போது தேனீக்களை போல பணியாற்றி அனைத்து வாக்காளர்களையும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்க செய்ததில் அதிமுக, பா.ம.க. பா.ஜ. அ.ம.மு.க, த.மா.கா., ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. சட்டப்பேரவை தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இரு கட்டங்களை விட வரும் மே 4ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டம் தான் மிகவும் முக்கியமாகும். இந்த தேர்தலில் வெற்றி நமக்கு தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான். அதனால் தான் வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டத்தில் நாம் இன்னும் விழிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Paramaka ,President ,Anbumani ,Pa. M. ,. J. A. M. M. Ka ,Th. Ma. Ga. ,I. J. Q ,New Judiciary ,Revolution India ,
× RELATED ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாது: நயினார் பேட்டி