- அம்பேத்கர்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ் எஸ்.சி.
- ஜனாதிபதி
- பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்குமார்
- இந்தியா
- காங்கிரஸ்
சென்னை: தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: மே தினத்தில் நவீன இந்தியாவின் தந்தை அம்பேத்கரையும். காங்கிரசையும் நினைவு கூர்வோம். அம்பேத்கர், தொழிலாளர்களுக்காக 28 சட்ட மசோதாக்களை வடிவமைத்தார், முன்மொழிந்தார், நிறைவேற்றினார், அமல்படுத்தினார். சமவேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம், தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேர வேலை உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களை நிறைவேற்றினார். இன்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சட்டங்கள் தந்தது அம்பேத்கர். அதை நிறைவேற்றியது காங்கிரஸ். ஆனால் இத் தினத்தில், அம்பேத்கரை மட்டும் நினைவுகூர தொழிலாளர் மறந்து விடுகிறோம். தொழிற்சங்கங்களும் அதன் தாய் கட்சிகளும் அம்பேத்கரை கொண்டாடுவதை தவிர்த்தது மறதியல்ல. இருட்டடிப்பே. இந்த நாளுக்கு உயிர் கொடுத்த அம்பேத்கரையும், காங்கிரசையும் நினைவு கொள்வோம்.
