×

மே தினத்தில் தொழிலாளர்களின் தியாகத்தை போற்றுவோம்: துரை வைகோ பதிவு

சென்னை: மே தினத்தில் தொழிலாளர்களின் தியாகத்தை போற்றுவோம் என மதிமுக செயல் தலைவர் துரை வைகோ சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது: மே 1 என்பது உலகை இயங்க வைக்கும், நம்மை வாழவைக்கும் உழைப்பாளர் கொண்டாடப்படும் தினமாகும். இந்த நாளில் தொழிலாளர்களின் தியாகத்தை போற்றுகிறேன், உழைக்கும் வர்க்க தோழர்களின் திசை நோக்கி வணங்குகிறேன் வாழ்த்துகிறேன். உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துகள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : DURI VIGO RECORD ,Chennai ,Dhurai Wiko ,Dramida Action ,
× RELATED ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாது: நயினார் பேட்டி